Description
காந்தி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அரசியலுக்கு வந்துவிட்டவர் ஜின்னா.ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜின்னா, மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு நாட்டுக்கே அதிபராகப் பொறுப்பேற்றார்.முஸ்லிம்களுக்குத் தனி தேசம் அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ஜின்னா. தனது கனவு தேசத்துக்கு உயிரூட்டும் வரை ஒரு விநாடிகூட ஓயவில்லை அவர். நட்புக் கரம் நீட்டி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை வழிக்குக் கொண்டு வந்தார். உலக வரைபடத்தை மாற்றியமைத்தார்.தேசப்பிதா என்று ஒரு சாரார் ஜின்னாவைப் போற்றுகிறார்கள். பிரிவினைவாதி என்னும் குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு. ஜின்னாவை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் வாழ்ந்த காலகட்டத்தோடு அவரைப் பொருத்திப் பார்க்கவேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும்.