Description
நிலவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் கால் பதிக்கத் துடிதுடிக்கும் பிரதேசம் செவ்வாய் கிரகம். பூமியின் பக்கத்து வீடு. தொலைநோக்கி இன்றி சுலபமாகவே அண்ணாந்து பார்த்துவிட முடியும். ஆனாலும் செவ்வாய் இன்று வரை ஒரு புதிர்ப் பிரதேசம். எத்தனையோ கிரகங்கள் இருக்க, செவ்வாய்க்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? செவ்வாய் கிரகத்தை முன்வைத்து ஏன் இத்தனை விவாதங்கள்? உண்மையில் அங்கே வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்களால் பூமிக்கு ஆபத்து நேரலாம் என்று சொல்லப்படுவது உண்மையா?பல்வேறு நாடுகள் செவ்வாய்க்குத் தொடர்ந்து விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்து கொண்டுஇருக்கின்றன. செவ்வாய் கிரகம் பற்றி உலகம் இதுவரை தெரிந்துகொண்டது என்ன?