அன்பின் துளி: புனித தெரசா - நினைவுக் குறிப்பு


Author: M.G. Devasahayam

Pages: 160

Year: 2016

Price:
Sale priceRs. 130.00

Description

தேவசகாயம் நடந்தவற்றை எந்தவித அலங்காரப் பூச்சும் திரிபும் இன்றி அப்படியே விவரிக்கக்கூடியவர். புனித தெரசாவின் நற்பணிகளை மையமாக வைத்து அவர் தன் நினைவுக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். ஒரு சேவகராகவும் ஆட்சி அதிகாரியாகவும் இருந்த அவருடைய வாழ்வில் நடந்த நெருக்கடியான சம்பவங்களை விவரித்திருக்கிறார். பல்வேறு ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் பற்றிய அற்புதமான சித்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில உத்வேகமூட்டுபவை. சில கசப்பானவை. வேறு சில சோகமானவை. ஆனால், அவை எல்லாமே அடிப்படையில் உண்மையானவை.- கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தியின் பேரன், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னர்உலகம் முழுவதும் சேரிகளின் புனிதர் என்று அறியப்பட்டிருக்கும் அன்னை தெரசா இனிமேல் சொர்க்கத்தின் புனிதராக ஆகப்போகிறார். ஒவ்வொருவிதமான துயரத்தின் கண்ணீர்த் துளிகள் ஒன்று சேர்ந்து இயலாமையின் பெருங்கடலாக ஆகிவிட்டிருக்கின்றன. அவை கருணையையும் பரிவையும் நாடுகின்றன. ஒவ்வொரு கணமும் சிந்தப்படும் அந்தக் கண்ணீர்த்துளிகளை துடைக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார். நாம் களத்தில் இறங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் இதயத்தில் இருந்து நேரடியாக எழுதப்பட்ட, எளிய, அற்புதமான இந்தப் புத்தகம் சண்டிகரில் அரும்பணி ஆற்றிய அன்னையை ரத்தமும் சதையுமாக நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். ரெவ. இக்னேஷியஸ் மஸ்கரணாஸ், சண்டிகர் பிஷப்

You may also like

Recently viewed