ஆஸ்துமா - (சித்த மருத்துவம்)


Author:

Pages: 144

Year: 2008

Price:
Sale priceRs. 150.00

Description

இன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில்,ஆஸ்துமா என்றால் என்ன?யார் யாருக்கு ஆஸ்துமா வரும்?என்னென்ன காரணங்களால் ஆஸ்துமா வரும்?ஆஸ்துமா நோயாளிகளுக்கான சரியான உணவுமுறை எது?ஆஸ்துமா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்தப் புத்தகம், மற்ற எந்த மருத்துவ முறையாலும் முழுமையாகக் குணப்படுத்த முடியாத ஆஸ்துமா நோயை சித்த மருத்துவத்தால் மட்டும் எப்படி நிரந்தரமாகக் குணப்படுத்த முடிகிறது என்பதை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குகிறது.நூலாசிரியர் டாக்டர் துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளில் 60 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். பதிவுபெற்ற அரசு மருத்துவரான இவர், மருந்து-கள் தயாரிப்பிலும் தேர்ச்சி உடையவர். 25 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுபெற்ற மருத்துவர்களை உறுப்பினராகக் கொண்ட ‘இம்ப்காம்ஸ்’ அமைப்பில், மருந்துகளின் தர நிர்ணயித்துக்கான மருந்து தயாரிப்பு அறிவுரையாளராக 1985-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவருக்கு வயது 81.

You may also like

Recently viewed