Description
சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன?சர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்?இந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா?உடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது?- இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் தெளிவாக விளக்கு-கிறது இந்தப் புத்தகம். இந்த நோயால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும், செக்ஸ் கோளாறுகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களையும் எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தில், அவற்றுக்கான தீர்வுகளும் இடம்பெற்றுள்ளன.சர்க்கரை நோய் வந்துவிட்டாலே சிக்கல்தான். அத்துடன், செக்ஸ் பிரச்னைகளும் சேர்ந்துகொண்டால் மனத்தளவில் ஒருவர் நொறுங்கிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி யாரும் நொறுங்கிப்போகாமல் இருக்க இந்தப் புத்தகம் உதவும்.