முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல்


Author: க.ரேணுகா

Pages: 120

Year: 2016

Price:
Sale priceRs. 150.00

Description

சம்பங்கி சூப், தாமரைப்பூ ரசம், தூதுவளை சாதம், ஆலம்பழ கூட்டு, பிரண்டை சட்னி, அகத்திப்பூ சொதி, வல்லாரை சாம்பார், நஞ்சுண்ட கீரை குழம்பு, நன்னாரி வேர் துவையல், மூக்கரட்டை கீரை மசியல், என்று தினுசு தினுசான 100 ருசியான குறிப்புகள்...தூதுவளை சூப் தெரியுமா? முருங்கைக் கீரை சாறு சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவாரம்பூ அடையைக் குறைந்தபட்சம் பார்த்திருக்கிறீர்களா? துத்தி இலை குழம்பு என்று எங்காவது யாராவது சொல்லி கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் மூலிகை. அற்புதமான பல ஆற்றல்களைக் கொண்டிருக்கும் மூலிகைகளை ஒரே சமயத்தில் மருந்தாகவும் ஆரோக்கியமளிக்கும் உணவாகவும் நம் முன்னோர்கள் உட்கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் இந்த இரண்டு அம்சங்-களையும் புறந்தள்ளிவிட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுமுறைக்கு நாம் மாறிவிட்டோம்.இந்தப் புத்தகம் நம்மை மீண்டும் நம் பாரம்பரியத்துடன் இணைக்கிறது. வகை வகையான பல மூலிகைகளை அறிமுகம் செய்துவைக்கும் இந்தப் புத்தகம் அவற்றை எப்படி ருசியான உணவாக மாற்றவேண்டும் என்னும் வித்தையையும் சொல்லித் தருகிறது.பாரம்பரியம், ஆரோக்கியம், ருசி இந்த மூன்றையும் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்றால் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்!பத்திரிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பல தளங்களில் மூலிகை சமையலை அறிமுகம் செய்துள்ள நூலாசிரியர் ரேணுகாவின் இந்தப் புத்தகம் உங்களைக் கவரப்போவது உறுதி.

You may also like

Recently viewed