ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை


Author:

Pages: 152

Year: 2008

Price:
Sale priceRs. 220.00

Description

ஏற்பவர்கள் மட்டுமல்ல நிராகரிப்பவர்களும்கூட, ஜெயலலிதாவின் மரணத்தை ஒரு சகாப்தத்தின் முடிவு என்றே இன்று அழைக்கிறார்கள்.எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.ஏராளமான ஊழல் வழக்குகள், கோர்ட் படியேறல்கள், தேர்தல் தோல்விகள், அடியோடு வீழ்ச்சி என்று காலம் அவரை எத்தனை அசைத்துப் பார்த்தாலும் அசையாத இரும்புப் பெண்மணி. அவரது உடன்பிறவா சகோதரி பற்றி, அவர்மூலம் வந்து சேர்ந்த உறவுகள் பற்றி, உலகம் வியந்த அவரது வளர்ப்பு மகன் திருமணம் பற்றி, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகள், புடைவைகள், செருப்புகள் பற்றிக்கூட கோடி கதைகள் சொல்லவும் கேட்கவும் எப்போதும் ஆள்களுண்டு தமிழகத்தில்.தமிழ்த் திரைவானில் கோலோச்சிய நாள் முதல் தமிழக அரசியலின் தவிர்க்கமுடியாத சக்தியாக உயர்ந்தது வரையிலான ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை முழுவதுமாக இந்நூலில் பதிவாகியிருக்கிறது.

You may also like

Recently viewed