சப்தமில்லாத சப்தம்


Author: ஓஷோ

Pages: 304

Year: 2016

Price:
Sale priceRs. 290.00

Description

சப்தத்தில், நான்கு விதங்கள் இருக்கின்றன. முதல் சப்தத்தின் பெயர் 'வைகாரி'. யாராவது பேசும்போது நாம் கேட்பது இதைத்தான். இரண்டாவது வகையான சப்தத்தின் பெயர் 'மத்யமா', அதாவது நடுநிலையானது. இப்போது நான் 'மிட்டாய்' என்று சொன்னாலோ, அல்லது மிட்டாயைப் போல ஒன்றைக் காண்பித்தாலோ, உங்கள் மனம், 'ஓ, மிட்டாய்!' என்று நினைக்கிறது அல்லவா? இது மனதின் கற்பனையோ அல்லது வெறும் அதிர்வோ அல்ல.சிவன் தனது ஏழு சீடர்களுக்கு யோகாவைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, பல சிக்கலான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அவர் பேசவே இல்லை.
'மிட்டாய்' என்பது ஒரு குரல், ஒரு சப்தம், உங்கள் மனதின் ஒரு பரிமாணத்திலிருந்து வெளிப்படுகிறது. இந்தச் சப்தத்தைத்தான் 'மத்யமம்' என்கிறோம். சப்தத்தின் மூன்றாவது பரிமாணத்தின் பெயர் 'பஷ்யந்தி'. இது மனதின் சிந்திக்கும் திறனை குறிக்கிறது. நான் உங்களிடம் மிட்டாயை காண்பிக்கவும் இல்லை, 'மிட்டாய்' என்று சப்தமிடவும் இல்லை, இப்படி வெளியிலிருந்து எந்த குறிப்பும் வராமல் உள்ளுக்குள்ளிருந்து தானாகவே 'மிட்டாய்!' என்று வெளிப்படுகிறது

 

You may also like

Recently viewed