Description
ஓஷோ இந்த மந்திரப் பெயர் செய்திருக்கும் மனமாற்ற மாயா ஜாலங்கள், லட்சோப லட்சம் மக்களின் விழிப்புணர்விற்கு வெளிச்சமிட்டு இருக்கிறது. அமெரிக்காவில். ஒரேகான் மாநிலத்தில் ஓஷோ வசித்தபொழுது, தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது சொற்பொழிவிற்காகவே வந்தனர்தாங்கள் விழிப்புணர்வு பெற, ஓஷோவிடம் கேள்விகள் கேட்டனர். தனது பதில்கள் மூலம் ஓஷோ அவர்களை 'விழிப்புணர்வு' அடையச் செய்தார்! என்றுமே மக்களைச் சிந்திக்க வைக்கின்ற சிந்தனையாளர்களுக்கு, இந்த அரசியல்வாதிகள் விரோதிகளே ஓஷோவை அமெரிக்க நாடு படாத பாடுபடுத்தியது. ஆனால், ஓஷோ இன்று அமெரிக்காவை விட மிகச் சிறந்த மனிதர் என்ற பெயரோடு உலகம் முழுமையும் பரவிக் கொண்டு வருகிறார். இன்னும் பத்து ஆண்டுகளில், உலகின் அதிகம் மொழி பெயர்க்கப் பெற்ற எழுத்தாளர்/ சொற்பொழிவாளர் என்று ஓஷோ அழைக்கப்படுவார். கேள்விகளுக்கு பதிலளிக்கும்பொழுது, சிறு கதைகளும், நகைச்சுவைகளும், வேத உபநிஷத்துக்களையும். அனைத்து மதங்களின் சாரங்களையும் சேர்த்துச் சொல்கிற ஞானி இன்றுவரை ஓஷோ ஒருவர்தான்!