Description
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்னும் நிலைமை சீனர்களுக்கு.விதி என்று மக்கள் ஏற்றுக்கொண்டதை மாற்றியமைத்திட விரும்பினார் மா சே துங். மிகவும் சவாலான, ஆபத்தான பணி அது. அராஜகமான அரசாங்கத்தை எதிர்த்துப் போர் தொடுத்தாகவேண்டும். இந்தப் போரில் மக்களையும் இணைத்துக்கொண்டாகவேண்டும்.ஆரம்பித்தார் மா சே துங். தெளிவான அரசியல் சித்தாந்தம் ஒன்றை உருவாக்கிக்கொண்டார். தீர்க்கமான போர் தந்திரம் ஒன்றை வகுத்துக்கொண்டார். மக்களைத் தயார்படுத்தினார். போராட்டம் ஆரம்பமானது.அடிமைத்தனம் ஒழிந்தது. உழைக்கும் மக்களின் புதிய அரசு உருவானது. எங்கோ ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த சீனா, கம்பீரமாக எழுந்து நின்றது. அசாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்திய அற்புத மனிதரின் வீர காவியம் இது.