மக்களாகிய நாம்...


Author:

Pages: 168

Year: 2009

Price:
Sale priceRs. 120.00

Description

நாம் ஊரவாக்கிய அரசாங்கம்தான் நம்மை ஆள்கிறது. ஆனால் எப்போதேனும் விமரிசனம் இல்லாமல் இருந்திருக்கிறோமா?ஏன் நமது ஆட்சியாளர்களை நமக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை?நமது விருப்பங்கள், நமது தேவைகளை என் அவர்களால் முழுமையாகத்தீர்த்து வைக்க முடிவதில்லை?சரி, அவர்கள் சரியில்லை, நம்மால் ஒரு வழிக்குக் கொண்டுவர முடியாதா? அடுத்தத் தேர்தலில் வாக்கை மாற்றிப்போடுவதுதான் ஒரே வழியா?அரசாங்கத்தை நம் வழிக்குக் கொண்டுவர சில உருப்படியான வழிகளை இந்நூலில் விவரிக்கிறார் அ,கி, வெங்கடசுப்ரமணியன்.அரசாங்கத்தைத் தட்டி கேட்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்கள் கேட்கலாம். அனைத்துக்கும் மேலாக, இன்றை அதிமுக்கியத் தேவை அதிகாரப் பரவலாக்கல்.உள்ளாட்சிகள் தங்களுக்குரிய அதிகாரத்தைப் பெற்றால், மக்களாகிய நாம், அவற்றைத் தட்டிக் கேட்டு, நமக்கு வேண்டிய காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம். ஒரு சிறந்த குடியாட்சி முறையில் இந்தியாவை மாற்றி அமைக்க என்ன செய்யவேண்டும் என்பது வெங்கட சுப்ரமணியன் கட்டுரைகள் வாயிலாக நமக்கு தெரிகிறது.ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து, நிர்வாகத்தின் உள் நுணுக்கங்களை நன்கு புரிந்துகொண்டுள்ள இவர் நமக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். தினமணி, ஜனசக்தி, அவரே ஆசிரியராக இருந்து நடத்தும் குடிமக்கள் முரசு ஆகிய இதழ்களில் வேங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒரு நல்ல குடிமைச் சமுகத்தை அமைக்க விரும்பும் எவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:உளவியல் - 20.08.2009செம்புலம் - 02.05.2009வாரணம் - 18.04.2009எம். எஸ். உதயமூர்த்தி - மார்ச் 2009 உயிர்ப்போடிரு - 16-03-2010

You may also like

Recently viewed