Description
மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த பேராசிரியர்களும் ஆளுமை பெற்றவர்களாக மாறத் துடிக்கும் மாணவர்களும் சங்கமிக்கும் அபூர்வ இடம் அது.நேரடி அனுபவங்களின் வாயிலாக ஐ.ஐ.எம்.மை அறிமுகம் செய்துவைக்கும் நூலாசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் பயின்றவர். கடந்த முப்பது வருடங்களாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல ஆலோசனை வகுப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.