Description
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஒயில்ட் எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். மிகச் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து, பெரும் புகழ் பெற்றவர்.சுயநலம் கொண்ட பூதம்!, நைட்டிங்கேலும் ரோஜாவும், சந்தோஷமான இளவரசன் என்ற இந்தத் தொகுப்பில் உள்ள மூன்று கதைகளும் அடிப்படையில் ஒரே விஷயத்தைச் சொல்கின்றன. அது அன்பு. பிற உயிர்களை நேசிப்பதுதான் வாழ்க்கை, அதைவிட பெரிய இன்பம் வேறு எதுவும் இல்லை என்பதைத்தான் இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் உணர்த்தியிருக்கின்றன.ஆஸ்கர் ஒயில்ட் குழந்தைகளுக்காக எழுதிய இந்தப் பிரத்யேகக் கதைகள் உங்கள் மனத்தைக் கவர்வது நிச்சயம்!