Description
க்ரிம் சகோதரர்கள் தொகுத்த?அட்டகாசமான எட்டு தேவதைக் கதைகள்.ஜெர்மனியைச் சேர்ந்த ஜேக்கப் லுட்விக் க்ரிம், வில்ஹெம் கார்ல் க்ரிம் இருவரும் க்ரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் பல மொழிகளில் இவர்களின் தேவதைக் கதைகள் இன்றும் மக்களால் விரும்பப்படுகின்றன.தவளை இளவரசன், சின்ட்ரெல்லா, ஆறு அன்னங்கள், ஸ்நோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும், தங்க வாத்து, ரபுன்சேல், பாடும் எலும்பு, வயதான சுல்தான் என்ற எட்டுக் கதைகளும் தித்திக்கும் தேன்!