Description
உணவு - உடை - உறைவிடம். இதுதான் மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்விக்கு உணவு என்பதுதான் முதல் பதிலாக இருக்கிறது. ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்பதைவிட, என்ன சாப்பிட்டோம், எப்படிச் சாப்பிட்டோம், அது உடலுக்கு நல்லதா என்பது முக்கியம். அந்த வகையில், உடல் நலனில் அக்கறை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில்,குறைந்த அளவு எண்ணெய்யில் ஆரோக்கியமான, டயட் உணவைச் சமைப்பது எப்படி?எப்படிச் சமைத்தால் உணவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அப்படியே முழுமையாகக் கிடைக்கும்?எந்தெந்த உணவுப் பொருள்களில் என்னென்ன சத்துகள் உள்ளன?அதிக உடல் எடையைக் குறைத்து உயரத்துக்கு ஏற்ற சரியான எடையில், ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?என்பது உள்ளிட்ட ஆரோக்கிய, டயட் சமையலைப் பற்றி தன்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நிறைய உணவு வகைகளை செய்முறைகளோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உங்கள் சமையல் அறையில், நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம் இது.