Description
ஆங்கில அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன்களில் ஒருவர் ஏ.எ. வெல்ஸ். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர், பத்திரிகையாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட வெல்ஸின் பெயர் இன்றளவும் நிற்க காரணம் அவரின் அறிவியல் புனைக்கதைகளே!கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன், அதை இயக்கி வெவ்வேறு காலகட்டங்களுக்குள் பயணிக்கிறார். எதிர்கால உலகத்தில் அவர் சந்திக்கும் விஷயங்கள், ஆபத்துகள், தொலைந்து போகும் கால இயந்திரம், போராடி கால இயந்திரத்தை எப்படி மீட்கிறார் என்பதை ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்கிறது நாவல்.