நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்


Author: டாக்டர் கே.எஸ்.சுப்பையா

Pages: 192

Year: 2009

Price:
Sale priceRs. 250.00

Description

இன்று உலக அளவில் ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மக்களிடையே அதிகம் பிரபலமாக இருப்பது? ஹோமியோபதி மருத்துவம்தான். சாதாரண ஜலதோஷத்தில் இருந்து எய்ட்ஸ், சர்க்கரை நோய், புற்றுநோய் என மிகக் கொடுமையான நோய்களுக்கும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவத்தில், நோய்க்கு மருந்து கொடுப்பதற்குப் பதிலாக, நோய் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து நோயாளிக்குத்தான் மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நோய் முழுமையாகவும், பூரணமாகவும் குணப்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஒரு நோய்க்கு பலவித அறிகுறிகள், பலவித காரணங்கள் இருக்கலாம். ஒரு அறிகுறியோ, காரணமோ இருந்தால் ஒரு மருந்து என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ, காரணங்களோ இருந்தால் அதற்கு வேறொரு மருந்து என, "நோய்" குறித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவதால்தான் ஹோமியோபதி மருந்துகளின் வெற்றி சதவிகதம் அதிகமாக இருக்கிறது. மேலும், ஒரு நோய்க்கு என்னென்ன அறிகுறிகள் இருக்கலாம், அவற்றுக்கான மருந்துகள் என்னென்ன என்று தெளிவாகவும், எளிதில் புரியும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. அதுதவிர, ஒரு நோய் என்றால், அது எதனால் ஏற்படுகிறது, அவற்றுக்கான அறிகுறிகள் என்னென்ன, நோய் வந்தால் என்ன செய்வது, நோய் வராமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன புத்தகத்தைப் படியுங்கள், தெரிந்துகொள்வீர்கள்.

You may also like

Recently viewed