Description
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோஹன்னா ஸ்பைரி. இவர் ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். அவற்றில் ஹெய்டி என்ற இந்த நாவல்தான் அவரை உச்சத்தில் வைத்தது. குழந்தைகள் இலக்கியத்தில் இன்றளவும் முகவும் முக்கியமான நாவலாக ஹெய்டி இருக்கிறது.பெற்றோர்களை இழந்த ஹெய்டி, தாத்தாவிடம் வளர்கிறாள். பீட்டரும் ஆடுகளும் அவள நண்பர்கள். திடீரென்று வசதிமிக்க ஒரு வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு கிளாராவின் நட்பு கிடைக்கிறது. ஆனாலும் அவளால் இயற்கை எழில் முகுந்த மலை, தாத்தா, நண்பர்களை மறக்க முடியாமல் தவிக்கிறாள். பிரச்னைகளில் மாட்டுகிறாள். மீண்டும் தாத்தாவிடம் வந்தாளா ஹெய்டி, கிளரா-ஹெய்டி நட்பு என்ன ஆனது என்பதை மிகவும் அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.