Description
நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முனிசிபல் நிர்வாகம், மாநகர குடிநீர் வாரியம், தன்னார்வத் தொண்டர்கள், பணியாளர்கள், மாணவர்கள், வெவ்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஒருமித்து, கரம் கோத்து இந்த லட்சியக் கனவை நிறைவேற்றியிருக்கிறார்கள்.வியக்கத்தக்க திட்டம். சத்யா நகர் சென்று பார்த்தபோது, இதற்கு முன்னால் அந்தப் பகுதி ஒரு சேரியாக இருந்தது என்பதை என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை.