Description
அன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி. அழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு இடங்களுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் பிளாக் பியூட்டிக்கு ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் பிரச்னைகள், நண்பர்கள் என்று நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரு குதிரையின் வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லியிருக்கும் பிளாக் பியூட்டி நாவல் ஒரு கறுப்பு வைரம்.