Description
இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள். ஏன் துரத்தினார்கள்? எதற்காக நிறுத்தினார்கள்? எதுவும் புரியவில்லை! ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷும் வஸந்தும் அந்த ‘ஏன்’ ‘எதற்காக’வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை.