Description
மார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள். நாயகன் ஹக்கிள் கொடுமைக்கார அப்பாவிடம் இருந்து தப்பிக்கிறான். அவனைத் தத்தெடுக்கிறார் ஒரு பெண். ஆனாலும் அப்பாவின் தொல்லை தொடர்கிறது. ஊரை விட்டுச் செல்கிறான். ஜிம்மின் அறிமுகம் கிடைக்கிறது. பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் சந்திக்கிறான். பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறான். சாகசங்களைச் செய்கிறான். இறுதியில் ஜிம், ஹக்கிளின் அப்பா, ஹக்கிள் என்ன ஆனார்கள் என்பதை ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.