Description
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார். விடுதியில் தங்கியிருந்த மாலுமியின் மூலம் ஒரு வரைபடமும் ரகசியக் குறிப்புகளும் ஜிம் கைக்கு வந்து சேர்கிறது. அந்த வரைபடத்தைத் தேடி சில கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள். ஜிம் வரைபடத்தை டாக்டர் லிவ்சி, ஸ்க்விர் ஆகியோரிடம் கொடுக்கிறான். அனைவரும் புதையல் தீவு நோக்கி கப்பலில் கிளம்பு கிறார்கள். கடற்கொள்ளையரும் பின்தொடர்கிறார்கள். வழியிலும் தீவிலும் ஏராளமான பிரச்னைகள், தடைகள், ஆபத்துகள். இறுதியில் புதையல் யாருக்குக் கிடைத்தது என்பதை சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நாவல்.