ஆல் தி பெஸ்ட்

Save 10%

Author: சோம. வள்ளியப்பன்

Pages: 160

Year: 2009

Price:
Sale priceRs. 180.00 Regular priceRs. 200.00

Description

நேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்டும்.திறமை முக்கியம். என்றாலும், திறமை மட்டும் போதாது. உங்கள் பயோடேட்டாவின் வடிவமைப்பு, நீங்கள் பேசும் முறை, உடுத்தும் உடை, கேள்விகளை எதிர்கொள்ளும் லாகவம், பிரச்னைகளை சமாளிக்கும் விதம் என்று பல்வேறு அம்சங்களில் உங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டவேண்டும். சரியான முன்தயாரிப்பு இல்லாமல் நேர்முகத்தை எதிர்கொள்வது தவறு. நேர்முகத்தை நடத்தும் நிறுவனத்தின் தேவைகள், அதிகாரிகளின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை துல்லியமாகப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்தால்தான் வெற்றி சாத்தியமாகும்.நேர்முகத்தை எதிர்கொள்வது குறித்து உங்களுக்குள்ள குழப்பங்கள், அச்சங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கி, அத்தியாவசியமான பல முன்யோசனைகளை இந்நூலில் வழங்குகிறார் சோம. வள்ளியப்பன்.

You may also like

Recently viewed