Description
நான் ஓர் ஆணல்ல, பெண் என்பதை ஒருவர் எப்போது, எப்படி உணர்கிறார்? அதற்கான காரணங்கள் என்ன? இது உடல் சார்ந்த உணர்வா அல்லது உள்ளம் சார்ந்ததா?பெற்றோரும் உறவினர்களும் துரத்தியடிப்பார்கள் என்பது தெரிந்திருந்தும், செல்லும் இடமெல்லாம் இகழ்ச்சியும் கிண்டலும்தான் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும் திருநங்கையாக மாற ஒருவர் எப்படித் துணிகிறார்?திருநங்கைகளால் காதலிக்க முடியுமா? குடும்ப உறவில் ஈடுபடமுடியுமா? பிச்சை, பாலியல் தொழில் தவிர பிழைக்க வேறு வழி இல்லையா அவர்களுக்கு?பிரத்தியேக வாழ்க்கை முறை. தனித்துவமான பண்புகள் சொல்லொணா சிக்கல்கள், சோகங்கள். வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் கடினமானது. என்றாலும், வாழத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில், நம்மைவிட அற்புதமாக. நம்மைவிட அழகாக. இருபதுக்கும் அதிகமான திருநங்கைகளை நேரில் சந்தித்து, உரையாடி, அவர்கள் கதைகளை அவர்களிடம் இருந்தே நேரடியாகப் பெற்று இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் பால் சுயம்பு. தினத்தந்தியில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பரவலாக இத்தொடர் விவாதிக்கப்பட்டது. அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்ல, நம்மிடையே வாழும், நாம் புறக்கணிக்கும் ஒரு சமூகத்தை நெருங்கிச் சென்று அறிந்துகொள்ள உதவும் புத்தகம் இது.