ரூட்ட மாத்து


Author:

Pages: 160

Year: 2009

Price:
Sale priceRs. 210.00

Description

குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும்.வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன.ஒரு வகையில், குறுக்கு வழியும் நேர் வழிதான். அம்மை, அப்பனை சுற்றிவந்து உலகைச் சுற்றிவந்ததாக அறிவித்து ஞானப்பழம் பெற்ற பிள்ளையாரின் டெக்னிக் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.ஒரு மின்னல். மினுக்கென்று ஒரு வெளிச்சம். இருள் ஒரு கணம் கடந்து சட்டென்று ஒரு வெள்ளிக் கீற்று. புலப்படுகிறதா? ஆம், அதுதான். இனி நீங்கள் செல்லவேண்டிய பாதை அதுதான். சிபியின் இந்தப் புதிய புத்தகம் இதுவரை நீங்கள் பயணம் செய்த பாதையை மாற்றியமைத்து, இனி நீங்கள் செல்லவேண்டிய பாதையை அறிமுகப்படுத்திவைக்கிறது.

You may also like

Recently viewed