Description
உலகம் கொண்டாடும் அற்புதமான எழுத்-தாளர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். தனி மனித ஒழுக்கத்தை உள்ளத்தை உருக்கும்படி சொல்லக்கூடியவர். எழுத்தாளர், கல்வியாளர், ஆன்மிகவாதி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். சூரியன் உதிக்கும்போது ஓட ஆரம்பிக்க வேண்டும். சூரியன் மறைவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும். அப்படி ஓடிவிட்டால் ஓடிய நிலப்பரப்பு முழுவதும் ஓடியவனுக்கே! பாஹோம் நாள் முழுவதும் ஓடி இறுதியில் எவ்வளவு நிலத்தைச் சம்பாதிக்கிறான் என்பதை அழகாகச் சொல்கிறது, ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?’ பண்ணை அடிமைகளைக் கொடூரமாகவும் கேவலமாகவும் நடத்தும் ஒரு கண்காணிப்பாளன் கடைசியில் என்ன ஆகிறான் என்பதைச் சொல்கிறது, ‘கருணையின் ஒளி!’