Description
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூயி கரோல் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர். மாயாஜாலங்கள் நிறைந்த இவருடைய கதைகள் வாசகர்களையும் அந்த உலகத்துக்கே இழுத்துச் சென்றுவிடக்கூடியவை. ‘அதிசய உலகில் ஆலீஸ்!’ இதுவரை 125 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.கடிகாரத்தைப் பார்த்தபடி, பேசிக்கொண்டே செல்லும் முயலைப் பார்த்த ஆலீஸ், முயல் பின்னாலேயே ஓடுகிறாள். திடீரென்று ஒரு குழியில் விழுகிறாள். அது ஓர் அதிசய உலகம். அங்கு விலங்குகள், பறவைகள் பேசுகின்றன. மனிதர்கள் வித்தியாசமான உருவங்களில் இருக்கிறார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி உருவத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடிகிறது. இந்த மாய உலகில் ஆலீஸ் என்ன செய்கிறாள் என்பதை அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.