Description
மார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள். நாடே கொண்டாடும் இளவரசன், உணவுக்கே வழியின்றி இருக்கும் ஏழை. எதிரெதிர் துருவங்கள் கொண்ட இந்த இருவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். உருவ ஒற்றுமையால் இடம் மாறிப் போகிறார்கள். வெவ்வேறு சூழ்நிலைகள், குழப்பங்கள், பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இளவரசனும் ஏழையும் இறுதியில் என்ன ஆனார்கள் என்பதை அற்புதமாகச் சொல்கிறது இந்த நாவல்