சதீஷ் கிருஷ்ணமூர்த்தி நூல்கள்

Save 9%

Author: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Pages: 789

Year: 2024

Price:
Sale priceRs. 750.00 Regular priceRs. 820.00

Description

 

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

மார்க்கெட்டிங்.இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம். ஹைவே முழுவதும் ஹட்ச் ஹட்ச் என்று நாய்க்குட்டி தும்மியபடி நம்மைப் பின் தொடர்வதன் பின்னணி. மொபைல் எதுக்கு? டாக் பண்ணுறதுக்கு என்று த்ரிஷா உயரே இருந்து கண்ணடித்துப் புன்னகை செய்வதன் தேவ ரகசியம்.வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும்.அதற்குத்தான் தேவை மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம்.உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே?அப்படியானால், யோசிக்காமல் இதைப் படியுங்கள். எம்.பி.ஏ., படித்தால்தான் மார்க்கெட்டிங் புரியும் என்பதில்லை. இந்தச் சிறு புத்தகம் போதும். உங்கள் வர்த்தகம் கொழிப்பதற்கான வழிமுறைகளை அள்ளித்தருகிறது!சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் - ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஒரு அட்சய பாத்திரம்.அள்ளிக்கொள்ளுங்கள் ஐடியாக்களை!சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ., படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர். கவின்கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM சென்னை, ITM சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ், கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார்.

 

விளம்பர மாயாஜாலம்

 

புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான்.விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதனை அழகான விளம்பரமாக உருவாக்கத் தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை.இன்று நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசிக்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள். வீதியில் இறங்கினால், விளம்பரத் தட்டிகள். விட்டால் நம் முதுகிலேயே விளம்பர போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடு-வார்கள். இவ்வளவு லட்சம் விளம்பரங்களுக்கு இடையே, மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் மனத்தில் பதியுமாறு விளம்பரம் செய்வது எப்படி?விளம்பரம் என்றால் என்ன? குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவைக்கான விளம்பரத் திட்டத்தை எப்படி முடிவுசெய்வது?வெற்றிகரமான விளம்பரங்களை எப்படி உருவாக்குவது?விளம்பர உத்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகப்படுத்துவது எப்படி? விளம்பரங்களில் பெண்கள் அதிகம் தோன்றுவது ஏன்?வர்த்தகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.

 

மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள்

 

சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும். மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் தினம் இதனைத் தவறாகச் செய்து கையைச் சுட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. மார்க்கெட்டிங்கில் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் நடக்கின்றன என்பதை மிக அழகாக நமக்கு விளக்குகிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. சாதாரணத் தவறுகள் அல்ல இவை. மாபாதகங்கள். இந்தப் பாதகச் செயல்களைச் செய்வோருக்கு மீளாத பாவம் வந்துசேரும். இந்தத் தவறுகளால் அவர்களுடைய நிறுவனங்களுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்படலாம். ஏன், நிறுவனத்தின் எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே, இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். இந்தப் பஞ்ச மாபாதகங்களைப் பற்றிப் புரிந்துகொண்டால், வெற்றி நிச்சயம் என்று சொல்லமுடியாது. குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்கமுடியும் என்று சொல்லலாம். சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் முந்தைய நூல்களான ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’, ‘விளம்பர மாயாஜாலம்’ ஆகியவை இந்த நிர்வாகத் துறைகளில் தமிழில் வெளிவந்த முதல் நூல்கள். பல எம்.பி.ஏ கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களாக உள்ளன. இந்த நூலும் அதே வரிசையில் வைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம், மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்வோருக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.

 

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை எல்லாம் கற்றுக் கொண்டால்தான் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கமுடியும் என்று பயமுறுத்துகிறார்கள். சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த இரு தரப்புகளையும் ஒதுக்கிவிட்டு மார்க்கெட்டிங் உலகின் ‘அ’ முதல் ‘ஃ’ வரை அனைத்தையும் ஜாலியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். வெறுமனே பொருளை விற்றுக் கொண்டிருக்காதீர்கள். ஒரு பிராண்டாக மாறுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். கஸ்டமர் எனும் குலதெய்வத்தின் அருளை எவ்வாறு பெறுவது? போட்டியாளரை எப்படி முறியடிப்பது? தகவல் தொடர்பை வெற்றிகரமாகப் பயன்படுத்துவது எப்படி? ஊழியர்களின் பங்களிப்பை முழுமையாகப் பெறுவது எப்படி? நிறுவனத்தின் திறனை அதிகரிப்பது எப்படி? நிறுத்தி, நிதானமாக எல்லாவற்றையும் இந்நூல் விளக்குகிறது. ரசிக்க வைக்கும் எடுத்துக்காட்டுகள், சாதித்தவர்கள் மற்றும் சோதித்தவர்களின் கதைகள், மிக மிக இயல்பான வழிமுறைகள் என்று உங்களைச் சுண்டி இழுக்கும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் மார்க்கெட்டிங் ஆலோசகரும் பயிற்சியாளருமான சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மந்திரங்களை உள்ளடக்கிய நூல்.

You may also like

Recently viewed