Author: சி. சரவணகார்த்திகேயன்

Pages: 152

Year: 2009

Price:
Sale priceRs. 180.00

Description

நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலம் தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினால், பதில்களுக்கு மாறாக மேலும் புதிய கேள்விகளே முளைக்கின்றன. பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய, சீன கலாசாரங்களைக் கடந்து, இன்று இந்திய ஒப்பனையுடன் "சந்திரயான்" என்று அவதாரம் எடுத்திருக்கிறது.சந்திரயான் இந்தியாவின் முதல் நிலவு ஆராய்ச்சித் திட்டம். சுதந்தர இந்தியாவின் 110 கோடி மக்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு பூமியிலிருந்து கிளம்பி சந்திரனை அடைந்த மாபெரும் திட்டம். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய முதல் திட்டம். சந்திரயான் நிலவைச் சுற்றத் தொடங்கிய அந்தத் தருணம், இந்தியர்கள் அனைவரும் நிஜமாகவே பெருமையுடன் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள வைத்த தருணம். அந்தத் தொழில்நுட்ப மாயாஜாலத்தின் ஆதியோடந்தமான குறுக்குவெட்டுச் சித்திரம் இந்நூல்.

You may also like

Recently viewed