Description
ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப்பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள்
எழுதிய டயரியும் நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது. ஆட்டம், அடி உதை ரத்தம் தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச்சுழலில் சிக்கி அல்லல்படுகிறான். அந்த நிருபன், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபனின் அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் '24 ரூபாய் தீவு ' ஒரு ஜெட் வேகக்கதை.