Description
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின்
அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோன்றுகிறது. செய்யவில்லை. காரணம், இதை எழுதும்போது இருந்த என் இளமையும் தமிழில் புதியதாகப் பல முயற்சிகள் வசனநடையில் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் இப்போது எனக்கு இல்லை. இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ சுகதுக்கங்களைப் பார்த்துவிட்டேன். உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக் கைவிட்டுவிட்டேன். நைலான் கயிறு ஒரு தலைமுறையினரைப் பலவிதங்களில் மாற்றியிருக்கிறது அல்லது பாதித்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவந்தது. நைலான் கயிறு ஓர் ஆரம்பம். இது பல்வேறு விடிவங்களில், ஏன் ஒரு படக்கதையாக்க்கூட வெளிவந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு தேவைப்படுவது எனக்குப் பெருமையே.