Description
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில் இருக்கும் ஊ‘ழியர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பது எப்படி? வேலைக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? தகுதிக்கு ஏற்ற பணிகளைத் தேர்வு செய்வது எப்படி? ஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது.? ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு சேர்ந்து நாமும் அடுத்த்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும். செயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல. உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கபட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். உங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.