Description
சோவியத்திலும் சீனாவிலும் நடைமுறைக்கு வந்த கம்யூனிசக் கொள்கையின் இந்திய வடிவம் மேற்கு வங்கம் என்றால் அதை வடிவமைத்தவர் ஜோதிபாசு. தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சிக்குள் நுழைந்த ஜோதிபாசு, கட்சி தடையின்றி செயல்படுவதற்குப் பிரதானமான காரணமாக மாறிப்போனார். நேர்மையை, கண்ணியத்தை முன்வைத்து அரசியல் நடத்திய வெகு சிலரில் ஒருவராக அவர் அறியப்படுகிறார். மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு அமல்படுத்திய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படை, அவரது மனிதாபிமானம். மக்கள் மீது அவர் கொண்டிருந்த அப்பழுக்கற்ற நேசம், நம்பிக்கை. தேர்தலை மையமாக வைத்து அல்ல, அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே ஓர் அரசு திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதில் ஜோதிபாசு உறுதியுடன் இருந்தார். ஒரு கட்சியின் தலைவராகவோ ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லாமல் தொழிலாளர்களின் தோழனாக அவர் இன்று அறியப்படுவதற்குக் காரணம் இந்தக் கொள்கை தெளிவுதான். ஒரு புரட்சிகரமான மாற்றுப்பாதையை அமைத்துக்கொடுத்த ஒப்பற்ற தலைவரின் உயிரோட்டமான வாழ்க்கை வரலாறு.