Description
ஹூ ஜிண்டாவ் குறித்து அறிய முற்படும்போது ஏற்படும் அதே சவால்கள், சீனாவைக் குறித்து அறிய முற்படும்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. திறந்த பொருளாதாரக் கொள்கையை வெற்றிகரமாக கடைபிடித்து வரும் சீனாவின் பல கதவுகள் இன்னமும் மூடியே கிடக்கின்றன. மாவோ, டெங்சியோபிங், ஜியாங் ஜெமின் என்று மூன்று தலைமுறை சீனாவையும் ஹூ ஜிண்டாவ் அறிவார். இன்றைய சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார சாதனைகளோடும் சறுக்கல்களோடும் அவர் பின்னிப் பிணைந்துள்ளார்.உலகின் மிகப் பெரிய கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்படித் திகழ்கிறது? சீனா எப்படி ஒரு வல்லரசானது? அமெரிக்காவுக்குச் சவால்விடும் பொருளாதார சக்தியாக சீனா திகழ்வது எப்படி? இவற்றுக்கு சீனா கொடுத்த விலை என்ன?. மாவோ, திபெத் குறித்து முன்னதாக எழுதியுள்ள மருதனின் இந்தப் புத்தகம், நவீன சீனாவின் சரித்திரத்தை, அரசியலை, பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள மிகச் சரியான ஒரு தொடக்கப்புள்ளி.