Description
சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்கிறது இந்தப் புத்தகம். பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், மருத்துவமனைக்கு மாதந்தோறும் படையெடுப்பதைத் தவிர்க்க முடியும் என்கிறார் ஆசிரியர் சுப்ரமணி. மேலும், காய்கறிகள் / பழங்களில் உள்ள சத்துகள் மூலமாக நம் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்வது எப்படி?1. உடல் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் ஏற்றவாறு நம் உணவுப்பழக்கம் எப்படி அமைய வேண்டும்? 2. பெண்கள் தங்களது உணவு விஷயத்தில் பின்பற்றவேண்டிய அம்சங்கள் என்னென்ன?3. வண்ண உணவுகள், நம் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையில் உதவுகின்றன?4. நம் உடல் உறுப்புகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் உணவுகள் எவை எவை?போன்ற பல தலைப்புகளில், உணவு எப்படி மருந்தாகச் செயல்படுகிறது என்பதை விரிவாக விளக்கும் இந்தப் புத்தகம், உங்களது சமையல் அறையில் இருந்தால் நீங்கள் உங்கள் உடலை வெல்லலாம், உலகையும் வெல்லலாம்.