புலித்தடம் தேடி


Author: மகா.தமிழ்ப் பிரபாகரன்

Pages: 216

Year: 2017

Price:
Sale priceRs. 275.00

Description

ரத்த ஈழத்தில் 25 நாள்கள்...ஈழ மண்ணில் ஒரு சவால்மிகு பயணம். பதைபதைக்கச் செய்யும் நேரடி ரிப்போர்ட். போரால் துண்டாடப்பட்ட ஒரு தேசத்தைக் கண்முன் நிறுத்தும் ஆவணம்.‘இலங்கை அரசியல், அங்கு தமிழ் மக்கள் நடத்திய அகிம்சைப் போராட்டம், ஆயுதம் தாங்கிய யுத்தம், சிங்கள இராணுவம் நடத்திய இனப்-படுகொலைகள், இறுதி யுத்தம் ஆகியவை பற்றி ஏராளமான புத்தகங்கள் உண்டு. ஆனால் போருக்குப் பிந்தைய ஈழம், அந்த இடங்கள், மக்கள் நிலைமை பற்றிய புத்தகங்கள் இல்லை. அதுவும் நேரடி சாட்சி எழுதிய பதிவுகள் இல்லை. அந்த வரலாற்றுக் கடமையை மகா. தமிழ்ப் பிரபாகரன் துணிச்சலாகச் செய்துள்ளார்.’ - ஜூனியர் விகடன்‘இலங்கை மண்ணில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியில் இதுவரையில் சிறிதளவே வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. பெரும் பகுதி குழி தோண்டிப் புதைப்பட்டுள்ளது என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்துகொள்ளும்போது மனித நேயம் படைத்த யாராலும் பதறாமல் இருக்கமுடியாது. இலங்கை ராணுவத்தின் கண்களில் சாமர்த்தியமாக மண்ணை அள்ளித் தூவிவிட்டு 25 நாள்கள் ஈழ மண்ணின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து, அங்குள்ள கள நிலைமைகளை அறிந்து படைப்பாக அளித்துள்ள நூலாசிரியரின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.’ - தினமணி ஜூனியர் விகடன் இதழ்மூலம் பல லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்த தொடர் இப்போது நூல் வடிவில்.

You may also like

Recently viewed