வஞ்சக உளவாளி


Author:

Pages: 288

Year: 2010

Price:
Sale priceRs. 265.00

Description

பர்மாவின் சுதந்தரப் போராட்டம் குறித்து இந்தியா ஏன் மௌனம் சாதிக்கிறது?பர்மாவின் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று இந்தியா உறுதி அளித்திருந்தது. அவர்களுக்கு ஓர் இந்திய உயர் அதிகாரி எல்லா உதவிகளும் செய்து கொடுத்தார். ஆனால், காலப்போக்கில் அந்த வாக்குறுதி கைவிடப்பட்டது. இந்தியப் படையினரால் சில பர்மிய விடுதலைப் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 36 பேர் இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த இந்திய உயர் அதிகாரி காணாமலே போய்விட்டார்.இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தின் புவியியல் சார்ந்த அரசியல் பின்னணியில், சிலிர்ப்பூட்டும் ஒரு மர்மக் கதையாக ஹக்சரின் விசாரணை விரிவடைகிறது. இந்திய,சீனப், போட்டிகள், இயற்கை எரிவாயு வளத்தில் பர்மாவின் அதிகரித்து வரும் முக்கியத்துவம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்கிற கிளர்ச்சிகள் என எல்லாமே சங்கிலித்தொடர் நிகழ்வுகளில் முக்கியக் கண்ணிகளாக இருக்கின்றன.அந்த 36 பர்மியக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மட்டுமல்ல, அந்த ராணுவ அதிகாரி காணாமல்போனதன் பின்னணி குறித்த இந்திய அரசின் அசாதாரண மௌனத்தை மட்டுமல்ல, பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களைக் குளிர்விப்பதற்காக பர்மிய விடுதலைப் போராளி-களைச் சிறையில் அடைத்ததன் மூலம் இந்திய அரசு தனது சொந்த அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறிவிட்டது என்பதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் நந்திதா ஹக்சர். இந்தியா, அண்டை நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்குத் துணை போனால், தன்னுடைய நாட்டில் ஜனநாயகத்தை எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற கேள்வியை இந்த நூல் வலுவாக எழுப்புகிறது

You may also like

Recently viewed