கிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு


Author:

Pages: 392

Year: 2012

Price:
Sale priceRs. 375.00

Description

தமிழில்: ராமன் ராஜாஇந்தியா எப்படிச் சுதந்தரம் பெற்றது? காந்தி, இந்தியாவுக்குச் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தார்.இந்தியா யாரிடம் அடிமையாக இருந்தது? ஆங்கிலேயர்களிடம்.ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவைப் பிடித்தார்கள்? வாணிகம் செய்ய வந்தவர்கள் அப்படியே இந்தியாவைப் பிடித்துப் போட்டுவிட்டார்கள்.இதுதான் நம் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஏன், நமக்குமேகூட நம் வரலாறு பற்றித் தெரிந்தது. இதற்குமேல் நமக்கு அதிகம் தெரியாது.கிழக்கிந்தியக் கம்பெனி என்பது யார்? இங்கிலாந்து ராஜா, ராணிக்கும், நாடாளுமன்றத்துக்கும், கம்பெனிக்கும் என்ன தொடர்பு?வாணிகம் செய்ய வந்தவர்கள் ஏன் நாடு பிடித்தார்கள்? இது திட்டமிடப்பட்ட ஒரு செயலா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா?லண்டன் பங்குச்சந்தையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்கு விலைகள் மேலும் கீழும் போனதற்கும், அவர்கள் இந்தியாவில் செய்த அட்டூழியங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?கம்பெனி, இந்தியாவில் செய்த அட்டூழியங்களை இங்கிலாந்தில் இருந்த யாராவது தடுக்க முயற்சி செய்தார்களா, இல்லையா?இந்தியாவிலிருந்து மொத்தம் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது? எப்படி இந்தியாவின் மிக வளம் வாய்ந்த ஒரு பகுதியான வங்காளம் ஒட்டுமொத்தமாக ஓட்டாண்டி ஆக்கப்பட்டது?நம்மை அடிமையாக்கியவர்கள் எப்படி அதனைச் செய்தனர் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ள வேண்டாமா? வரலாறு தெரிந்தால்தானே இன்னொரு முறை அடிமைகளாக ஆவதிலிருந்து நாமெல்லாம் தப்பிக்க முடியும்?

You may also like

Recently viewed