Description
ஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறுக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது.