Description
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் ஏன் வருகிறது? யார் யாருக்கு சர்க்கரை நோய் வரும்?சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்னென்ன? சர்க்கரை நோயால் ஏற்படும் வேறு பிரச்னைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடைகள் உள்ளன. எதைச் சாப்பிட்டால், என்னென்ன வழிகளைப் பின்பற்றினால் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு சர்க்கரை நோயாளியிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியக் கையேடு.