Description
கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - ‘சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க!’ கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு அங்கே செல்கிறான். புதிராகத் தெரியும் எஸ்டேட் முதலாளியுடன் சதுரங்கம் ஆடுகிறான். கூடவே மறைமுகமாக அவர் விடுக்கும் மற்றொரு சவாலையும் எதிர்கொள்கிறான்.