Description
‘மேற்கே ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ்-வஸந்த் இயங்கும் கதை. நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவரத்தைச் சொல்லும் முன்பாகவே கொல்லப்படுகிறாள். அதைப் பற்றி துப்பறியப் புறப்படும் கணேஷ் கடத்தல் கும்பல் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்து அதன் காரணமாகவே ஜெர்மனிக்கு பிரயாணப்படுகிறான். அங்கு இண்டர்போலுடன் இணைந்து கணேஷும் வஸந்தும் சாகசம் நிகழ்த்துகிறார்கள்.