Description
உலகில் இன்று, ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மிக அதிக மக்களால் நம்பி பின்பற்றப்பட்டு மருத்துவம் என்றால் அது ஹோமியோபதி மருத்துவம்தான். ஆங்கில மருத்துவர்களே வியக்கும் வண்ணம், நீடித்த மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சில பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நிரந்தரமாகவும், முழுமையாகவும் தீர்வு இருக்கிறது என்று ஹோமியோபதி மருத்துவர்கள் சொல்கிறார்கள்.மிகவும் எளியது; எல்லா வயதினருக்கும் ஏற்றது; மருந்துகளின் விலை மலிவு; பின்/பக்கவிளைவுகள் இல்லாதது; நோய்க்குப் பதிலாக நோய்க் காரணிகளுக்கு மருந்து கொடுக்கப்படுவதால், ஆச்சரியப்படத்தக்க, அதிசயத்தக்க அளவுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது ஹோமியோபதி மருத்துவம் குறித்து சொல்லப்படும் கருத்துகள்.இந்தப் புத்தகத்தில், மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சில முக்கியமான பாதிப்புகள்/பிரச்னைகள்/நோய்களுக்கு, அவற்றின் தன்மையை விளக்கி அவற்றுக்கான ஹோமியோபதி மருந்துகள் எவை என்று விவரித்துள்ள நூலாசிரியர் டாக்டர். ஆர். விஜய் ஆனந்த், நீங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிடாமல், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது என்பதை அறிவுறுத்தி உள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.