மதுரை சுல்தான்கள்


Author:

Pages: 96

Year: 2011

Price:
Sale priceRs. 140.00

Description

தமிழகத்தின் பதினான்காம் நூற்றாண்டு சரித்திரத்தைப்?பதிவு செய்யும் ஆவணம் இது.தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ‘சுல்தான்களின் ஆட்சி’, தமிழகத்தில் சுமார் 65 ஆண்டுகள் நடைபெற்றது என்பது பலரும் அறியாத, அதிகம் பதிவு செய்யப்படாத வரலாறு.வடக்கில் டெல்லியைத் தலைநகரமாகக் கொண்டு இந்தியாவை ஆண்ட சுல்தான்கள், தெற்கில் திருவேங்கடம் தொடங்கி தென்குமரி வரை உள்ள தமிழகத்தின் பரப்பையும் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். டெல்லி சுல்தான்கள் எப்படி தமிழகத்தைக் கைப்பற்றினார்கள்? அந்தச் சமயத்தில் சோழர்கள், பாண்டியர்களின் நிலை என்ன? சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் மதுரை எப்படி இருந்தது? அதனைத் ‘தமிழர்களின் இருண்ட காலம்’ என்று சொல்லலாமா? மதுரை சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது எப்படி?அரிதான வரலாற்றின் தெரியாத பக்கங்களைத்?தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

You may also like

Recently viewed