Description
தமிழில்: B.R. மகாதேவன்அதிகம் வாசிக்கப்பட்ட வெற்றிக் கதை இது!1868-ல் ஜம்சேட்ஜி டாடாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக தேசத்துக்கு வளம் சேர்த்துவரும் விதத்தை விவரிக்கும் புத்தகம் இது.தொழில் புரட்சிக்கு முந்தைய உலகில் முன்னணியில் இருந்த நம் தேசத்தை நவீன காலகட்டத்திலும் மேலான நிலைக்குக் கொண்டு செல்ல ஜம்சேட்ஜி மூன்று திட்டங்களை முன் வைத்தார். ஒன்று, எஃகு உருக்காலைத் திட்டம். இரண்டு, நீர் மின்சாரத் திட்டம். மூன்றாவது, ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகம். அந்தக் கனவுகளை அடியொற்றியே டாடா குழுமம் வளர்ந்து வந்திருப்பதன் மூலம் நிறுவனருக்கு நியாயமான அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது.ஆனால், அந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. அரசுக் கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலும், தாராளமயமாக்கல் நடைபெற்ற காலகட்டத்திலும் டாடா குழுமம் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவற்றை எப்படி வென்று காட்டியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.டாடா குழுமத்தின் வெற்றி என்பது வர்த்தக, தொழில்துறை சார்ந்த ஒன்று மட்டுமே அல்ல என்பதையும் தெளிவாக ஆவணப்படுத்துகிறது. பணியாளர் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், உயர் கல்வி மையங்கள், கலை, கலாசார மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு என பலவகைகளில் டாடா குழுமம் ஆற்றிவரும் தேச நலச் செயல்திட்டங்கள் பற்றியும் அழுத்தமாகச் சித்திரிக்கிறது.