Description
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான். இந்தியர்களை முழுவதும் வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் சிக்கிக்கொள்ளும் அவன் கதி என்னவாகிறது? இந்திய விமானப் படையின் டெக்னிக்கல் சமாசாரங்களைத் துல்லியமாக விவரிக்கும் இக்கதையின் ஆதாரக் கருத்து யுத்தமல்ல. அதன் இடையே மிளிர்ந்த மனித நேயம். இது குமுதம் இதழில் தொடராக வந்தது.