Description
வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜும் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல்வாதி என்று நாள் குறிப்பிடுகிறான். அரசியல்வாதியின் மகள் தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக கணேஷ், வஸந்தை அழைக்கிறாள். ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த ‘நிர்வாண நகரம்’ குங்குமத்தில் வந்த தொடர்.