Description
இருள் வரும் நேரம்' கல்கியில் தொடராக வெளிவந்தது. ப்ரொபஸர் ராம்பிரகாஷ் தன் இளம் மனைவி அம்ருதாவுடன் ஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு சென்று விட்டுத் திரும்பும்போது மனைவி காணாமல் போய் விடுகிறாள். அவளைத் தேடி திரும்ப அடையும்போது இடையே நேர்ந்து விட்ட ஒரு விரும்பத் தகாத சம்பவத்தால் சூழ்நிலை திசை மாறி போலீஸ், கோர்ட், கேஸ் என்று அவர்களது இயல்பான வாழ்க்கை தடம் மாறிவிடுகிறது. குற்றவாளிகள் பிறப்பதில்லை, சமூகம்தான் உருவாக்குகிறது என்பது கதையின் அடிநாதம்.